38க்கு யெஸ் … 10க்கு நோ !
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ, அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் செந்தில்நாதன் நாம் தமிழர் வேட்பாளர் ஜல்லிக்கட்டு பேரவை ராஜேஷ் மனுவும் ஏற்கப்பட்டது.
மற்ற சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்களின் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. 48 மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது 48 வேட்பு மனுக்களில் 10 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 38 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்தார். நாளை மறுநாள் 30ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் மாற்று வேட்பாளராக மனு செய்தவர்கள் நாளை அவர்களுது வேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள்.
அதன்பிறகு திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காததால் அவர் உள்ளிட்ட சுயேச்சைகளுக்கு சின்னங்களும் அன்று ஒதுக்கப்படும். 38 பேர்கள் களத்தில் இருக்கும் பொழுது இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலும் சின்னமும் நாளை மாலை இறுதியாக அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.