இணைந்தார் அதிமுகவில் காயத்ரி ரகுராம் !
தமிழகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மாநிலத் தலைவராக இருந்த பொழுது அக்கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கட்சியை விட்டு வெளியேறினார்.
எல்.முருகன், தமிழக பாஜ மாநிலத் தலைவராக வந்த பிறகு காயத்ரி ரகுராம் மீண்டும் பாஜகவில் இணைந்தார். எல்.முருகனுக்கு பிறகு அண்ணாமலை மாநிலத் தலைவரான பிறகு காயத்ரி ரகுராம், பாஜக வெளிநாடு, வெளிமாநில தமிழர் வளர்ச்சி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறியதாக 2022 நவம்பரில் காயத்ரி ரகுராம் ஆறு மாதம் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் தான் கட்சியை விட்டு விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிரடியாக அறிவித்தார். அத்துடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைத். தொடர்ந்து தனது சமூக வலைப்பக்கத்தில் கடும் குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் காயத்ரி ரகுராம் நேற்று அதிமுகவில் இணைந்தார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் வெளியிட்ட பதிவு: ‘களத்தில் எண்ணங்கள் நிறைவேற்ற தொடர்ந்து போராடும் இயக்கமாக அதிமுக இருக்கிறது. இட ஒதுக்கீடு, சிறுபான்மை யினர் நலனுக்கு முன்னுரிமை மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக அதிமுக உள்ளது. 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும் எம் ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அதிமுகவை சிறப்பாக உயிரூட்டி, நடத்திச்செல்வதோடு, எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் பழனிசாமியின் கீழ் கட்சி வெற்றிநடை போட உழைப்போம் எனப்பதிவிட்டிருக்கிறார். ஆனால் அதிமுக தலைமையகம் இது குறித்து எந்த செய்தியும் வெளியிட்டதாக தெரியவில்லை.