காலி மனைக்கும் வரி வந்தாச்சு அடுத்த அதிரடி !

0

மாநகராட்சிகளில் காலியாக இருக்கும் மனைகளுக்கும் வரி வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…… 2023ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 266 (1) பிரிவில், விவசாய நிலங்களை தவிர, பிற காலிமனைகளுக்கும் சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் 266 (2) பிரிவின் கீழ், கட்டிடம் கட்டப்பட்டுள்ள அளவீட்டை போல் 2 மடங்குக்கு மேல் இருந்தால் அந்த காலி நிலத்துக்கு உரிய விதிமுறையை பயன்படுத்தி காலிமனை வரி விதிப்பு செய்ய வேண்டும்.

இதேபோல் 2022ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டம் 97ம் பிரிவு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 259 (1) (இ) பிரிவின் கீழ் விடுபட்ட வரியினங்களுக்கு குறிப்பிட்ட நடப்பு அரையாண்டை தவிர்த்து, முன்னுள்ள 12 அரையாண்டுகள் அல்லது 6 ஆண்டுகளுக்கு சொத்து வரியை விதிக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான மாநகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலிமனைக ளுக்கு வரி விதிக்காமல் நிதி இழப்பு ஏற்படுவதாக தெரிகிறது.

எனவே காலிமனை வரி விதிப்பு செய்யும் வழிமுறைகளை மாநகராட்சி கமிஷனர்கள் கடைபிடிக்க வேண்டும். அதேபோல மனைபிரிவு அங்கீகாரம், அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதிகோரி உள்ளூர் திட்ட குழுமத்துக்கு விண்ணப்பங்கள் பெறும் போது, நிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அளவீடு செய்து காலிமனை வரி விதிக்கப்படாமல் நில உரிமைதாரருக்கு சொந்தமாக இருக்கும் மொத்த நிலப்பரப்புக்கும் 97 மற்றும் 259 (1) (இ) பிரிவின் கீழ் தெரிவித்துள்ளபடி, நடப்பு அரையாண்டுக்கு முன்னர் 12 அரையாண்டுகளுக்கு காலிமனை நிலவரி விதிக்க வேண்டும்.

logo right

விதிகளின் படி காலிமனை வரி விதிப்பு செய்த, நிலுவை இன்றி காலிமனை வரி செலுத்திய பின்னரே உள்ளூர் திட்டக்குழமத்தில் விண்ணப்பம் வைக்க பரிந்துரைக்க வேண்டும். கட்டிட உரிமம் நீட்டிப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்கு நடப்பு அரையாண்டு வரையிலான காலி மனை வரி முழுமையாக செலுத்திய பின்னரே உரிமத்தை நீட்டிப்பு செய்ய பரிந்துரை செய்ய வேண்டும்.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளை பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் காலிமனை வரி விதிப்பு செய்துரசீது பெற்ற பின்னர் பத்திர பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

வாழ்க்கையில் உழைக்கும் காலத்துக்கு அப்புறம் ஓய்வு காலத்தில் கையில் வரும் பணத்தைக்கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு வீட்டைக்கட்டிக்கொண்டு வாழாலாம் என்பது பெரும்பாலான மிடில் கிளாஸ் மாதவன்களின் கனவு அதற்கும் இப்படி வரி போட்டா எப்படி என இப்பொழுதே ஊரெங்கும் புலம்பல் கேட்க ஆரம்பித்து விட்டது.

Leave A Reply

Your email address will not be published.