சித்தார்த்துடன் காதலை உறுதி செய்த அதிதிராவ் !
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதிராவ் ஹைத்ரியும் காதலிப்பதாக தொடர்ந்து கிசு கிசுக்கள் வந்தவண்ணம் இருந்தன. இவரும் ஜோடியாக சுற்றிய புகைப்படங்களும் வெளியானது. ஆனாலும் காதல் குறித்து இருவரும் பதில் எதுவும் கூறாமல் மவுனத்தை கடைப்பிடித்து வந்தனர். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அதிதிராவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த சித்தார்த், அவரை பாட்னர்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதிதிராவின் தோளில் சாய்ந்தபடி உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் புத்தாண்டையொட்டி அதிதிராவ், சித்தார்த்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில், ‘நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இதற்காக நன்றியும் கூறிக்கொள்கிறோம். மகிழ்ச்சி, அன்பு, சிரிப்பு, அற்புதம் போன்ற மாயாஜாலங்கள் நிகழட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று பகிர்ந்துள்ளார். இதன் மூலம், தங்களது காதலை அதிதிராவ் உறுதிப்படுத்தி உள்ளார். சித்தார்த் – அதிதிராவ் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ள அதிதிராவ், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.