சூப்பர்குட் 98வது படத்தில் பகத்பாசில், வடிவேலு !
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போல, சினிமாத்துறையில் வருபவர்களுக்கு எல்லாம் வாழ்வளித்து வருபவர் ஆர்.பி.செளத்ரி, ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98வது படத்தில் வடிவேலு, பகத்பாசில் கூட்டணி மீண்டும் இணைகிறதாம் ‘மாமன்னன்’ படத்துக்குபின் பகத்பாசில், வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். சுதீஷ்சங்கர் இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரனும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். வடிவேலு மனைவியாக சித்தாரா வருகிறார். நாகர்கோவில் டூ பொள்ளாச்சி பயணத்தில், சாலை பின்னணியில் இளைஞரான பகத், வயதான வடிவேலு ஆகியோருக்கு இடையே என்ன நடக்கிறது என்ற கோணத்தில் இந்த கதை நடப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஜனவரி 22ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.