திருச்சி : திகுதிகுவென தீப்பற்றி எரிந்த கார் !
தஞ்சாவூர் மாவட்டம் நல்லதம்பி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் சிவில் இன்ஜினியரிங் வேலை பார்த்து வருகிறார் இவர், மனைவி, மகளுடன் பொள்ளாச்சி செல்வதற்காக தஞ்சையில் இருந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மணப்பாறை வரை சென்றவர் மீண்டும் தஞ்சாவூர் செல்வதற்காக டிவிஎஸ் டோல்கேட் பாலத்தில் காரில் வந்து கொண்டிருந்ந பொழுது காரில் புகை வந்துள்ளது. உடனே காரை ஓட்டுநர் மணிகண்டன், நிறுத்திவிட்டு அனைவரையும் இறங்க வைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து திருச்சி கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமில்லை என்றாலும் கூட அதற்கு அருகேதான் பழுதடைந்த பால வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகை முடித்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். நல்லவேளையாக உயிர்சேதம் எதுவும் ஏற்படாததால் காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.