திருச்சி : தெய்வ தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பேட்டி…

0

கடலூர் மாவட்டம் வடலூரில் சத்ய ஞான பெருவெளியில் வள்ளலாருக்கு பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் அந்த ஆய்வு மன்றத்தை பெருவெளியில் அமைக்க கூடாது மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 20ம் தேதி தெய்வ தமிழ் பேரவை சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

logo right

பழனி முருகன் கோவிலில் மாற்று மதத்தவருக்கு அனுமதி இல்லை என்கிற நீதிமன்ற தீர்ப்பு தவறானது. அந்த தீர்ப்பு சைவ நெறிக்கு, சித்தர்கள் நெறிக்கு, வள்ளலார் நெறிக்கு புறம்பானது. இந்துக்களாக இருந்தாலும் ஆன்மிக அடையாளங்களோடு வர வேண்டும் என அளித்துள்ள அந்த தீர்ப்பு இந்துக்களையும் வர்ணாசிரம அடிப்படையில் வடிக்கட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு.

அந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் இவ்வாறு பேட்டியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.