பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு நால்வருக்கு போலீஸ் வலை !!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சிவா .இவரது தாய் ஜெயலட்சுமி, நாயுடுபுரம் பகுதியில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை ராமசாமி மகன் ராஜு என்பவரிடம் கடந்த 2011ம் ஆண்டு கிரயம் பெற்றுள்ளார். கடந்த 5. 12. 2011ம் ஆண்டு ஜெயலட்சுமி பெயருக்கு வருவாய் துறையினர் பட்டா வழங்கி உள்ளனர். இதை அடுத்து 2017ம் ஆண்டு ஜெயலட்சுமி தனது மகன் சிவாவிற்கு இந்த நிலத்தை சட்டப்படி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த நிலத்திற்கு அருகே உள்ள இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குமரேசன், மற்றும் இவரது தம்பி ஆனந்த், இவர்களது உறவினர் கரூரைச் சேர்ந்த ராமசாமி மகன் காஷ்மீர் செல்வம், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கொடைக்கானல் நகரத் தலைவர் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு போலி ஆவணங்கள் சமர்ப்பித்து நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கியதில் அடிப்படையில், போலியான ஆவணங்கள் தயாரித்து 2016ம் ஆண்டு குமரேசனுடைய அம்மாவும், பெரியம்மாவும் இவர்களது உறவினரான கரூரைச் சேர்ந்த காஷ்மீர் செல்வத்திற்கு தான செட்டில்மெண்ட் செய்ததாக பதிவு செய்யப்பட்டதாக ஆவணத்தை தயாரித்து உள்ளனர்.
இதை அடுத்து காஷ்மீர் செல்வம் குமரேசன் வகையறாவிற்கு போலியான குத்தகை ஒப்பந்த பத்திரம் தயாரித்து வழங்கி உள்ளனர். இந்நிலையில், கடந்த 24. 9. 20 23ம்தேதி அன்று தனது நிலத்தினை சிவா சென்று பார்த்துக் கொண்டிருந்தபோது இந்து மக்கள் கட்சியை சேர்ந்த குமரேசன், மற்றும் இவரது தம்பி ஆனந்த் ,நகர தலைவர் கார்த்திக், இவர்களது உறவினர் காஷ்மீர் செல்வம் உள்ளிட்டோர் சிவாவை இந்த நிலத்தை காலி செய்யச் சொல்லி மிரட்டி உள்ளனர். கொலை செய்து விடுவதாகவும் மீரட்டி உள்ளனர்.
இதை அடுத்து நீதிமன்ற மூலம் சிவா புகார் செய்ததன் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குமரேசன், மற்றும் இவரது தம்பி ஆனந்த், நகர தலைவர் கார்த்திக், இவர்களது உறவினர் கரூர் காஷ்மீர் செல்வம் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் நால்வரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு செய்து இருந்தனர். இந்த மனு நேற்று முன்தினம் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை அடுத்து கொடைக்கானல் போலீசார் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குமரேசன், இவரது தம்பி ஆனந்த், இந்து மக்கள் கட்சி நகரத் தலைவர் கார்த்திக், குமரேசனின் உறவினர் காஷ்மீர் செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த விஷயம் கொடைக்கானல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.