மஜ்சுமல் பாய்ஸ் மோகம்… குணா குகையில் குவியும் சுற்றுலா பயணிகள் !!

0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலையாள மொழியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க கூடிய மஜ்சுமல் பாய்ஸ் என்ற திரைப்படம் குணா குகையை மையமாக வைத்து எடுத்த படமாகும் குகையில் விழுந்த தன்னுடைய நண்பனை காப்பாற்றக்கூடிய காட்சிகளை சிறந்து காண்பித்து இருக்கக்கூடிய இப்படத்தாள் குணா குகை மீண்டும் பிரபலமாக துவங்கி இருக்கிறது.

மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுக்காடு, தூண் பாறை, டால்பின் நோஸ், படகு குழாம், குணா குகை ஆகியவை பிரசித்தி பெற்றவையாக திகழ்கிறது. குடும்பத்திடன் வருபவர்கள் பேரிஜம் குறிஞ்சியாண்டவர் கோவில் பூம்பாறை உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களில் தங்கள் பொழுதை போக்கலாம்

logo right

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 மைல் தொலைவில் இருக்கக்கூடிய இந்த சுற்றுலாத்தலங்களுக்கு வரும்பொழுது முதல் சுற்றுலா தளமாக இருப்பது தான் மோயர் சதுக்கம் எப்பொழுதுமே மோயர் சதுக்கத்தில் தான் அதிக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காணப்படுவது வழக்கம்

ஆனால் மஜ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது முதல் மோயர் சதுக்கத்திற்கு அடுத்து உள்ள குணா குகையில் தான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இருக்கிறது. வனத்துறை அளித்துள்ள தகவலின் படி கடந்த நான்கு நாட்களில் மட்டும் குணா குகையை காண 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

முதல் சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய மோயர் சதுக்கத்திற்கு 17,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகமாக குணா குகை கண்டு களித்துள்ளனர். இனிவரும் நாட்கள் விடுமுறை தினம் என்பதாலும் சம்மர் காலம் என்பதாலும் குணா குகைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.