மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்த்தால் பட்டைய கிளப்பும் லாபம்ங்க…

0

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தில் விவசாயி அண்ணாமலை 10 ஆண்டுகளுக்கு மேலாக மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்வதன் மூலம் லாபம் கிடைப்பதாக விவசாயி தெரிவிக்கிறார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பட்டு புடவைக்கு புகழ்பெற்றது . அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக பட்டு புழு வளர்ப்பு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிறுநாத்தூர் கிராமத்தில் மல்பெரி பயிர் பயிரிட்டு வருகின்றனர். இது வறட்சியை தாங்கும் பயிராகும். இயற்கை உரமான மாட்டு சானம், தழை, ஆகியவை பயன்படுத்தி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்து வருகின்றனர். இந்த பட்டு புழு வளர்த்து பட்டு எடுக்க மொத்தம் 27 நாட்கள் ஆகின்றன.இந்த பட்டு புழு வளர்ப்புக்கு கிருஷ்ணகிரியில் இருந்து பட்டுப்புழு முட்டை கொண்டுவந்து பதப்படுத்தப்படுகிறது .10 தொகுதி கொண்ட முட்டையை வாங்கி வந்து வைக்கின்றனர். அவை 3000 முதல் 5000 வரையிலான புழுக்களை உருவாக்குகிறது . முட்டை 3 நாட்கள் இருட்டு அறையில் வைக்கப்பட்டு பின்பு 7 நாட்கள் இருட்டு மற்றும் வெளிச்சம் கொண்டு மல்பெரி இலையை பொடியாக்கி 5 நாட்கள் வரை அவற்றிற்கு உணவாக பயன்படுத்தி வருகின்றனர். அதன்பிறகு அலமாரி அமைத்து மல்பெரி இலைதண்டு 15 நாட்கள் வரை போடப்படுகிறது. பின்பு புழுக்கலானது கூடு வளையில் மூன்று நாட்கள் வரை நூல் சுற்றும் . 2 நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்டு அவற்றை ஒன்றாக சேர்த்து தர்மபுரி பட்டுக்கூடு மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது.இந்த பட்டு புழுவிலிருந்து வரும் பட்டு 27 நாட்களுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. 80 கிலோ முதல் 100 கிலோ வரை பட்டு கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஒரு கிலோவிற்கு ரூபாய் 300 முதல் 900 ரூபாய் வரை கிடைக்கிறதாம். இதற்கு வேலை செய்ய குறைந்த ஆட்கள் இருந்தாலே போதும் . பட்டு புழு வளர்ப்பதற்கு 5,000 ரூபாய் வரை செலவாகிறது. இந்த செலவினங்கள் போக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் பட்டு புழு வளர்ப்பவர்கள். அப்புறம் என்ன பட்டுபுழு வளர்ப்போம் பட்டைய கிளப்புவோம் லாபத்தில் !

Leave A Reply

Your email address will not be published.