அரசியல்ல இதெல்லாம் சாதாரண(ம்)மப்பா… நாடாளுமன்ற தேர்தலின் காமெடிபீஸ் !
2019 நாடாளுமன்ற தேர்தலில்திண்டுக்கல்லில் எம்பி பொறுப்பை எனக்கு தாங்க.. இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளின் பருப்பை எடுக்கிறேன். என்று மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது.இந்நிலையில் இன்று காலை தலைவர் மன்சூரலிகான் தலைமையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சபீர் அகமது, தலைமை நிலையச் செயலாளர் சீலன் பிரபாகரன் துணைப் பொதுச்செயலாளர் வல்லரசு உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் சென்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவுடன் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
ஆயினும் இன்னும் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது. அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம்.
நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம். எனவே இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்திய வானிலை மையம் இம்முறை கடும் வெப்பத்தின் தாக்கம் இருக்கும் எனக்கூறியிருக்கும் நிலையில் இவர் எங்கே போனாலும் காமெடி தாக்கம் குறையாது என்கிறார்கள் ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ இப்பவே கண்ணை கட்டுதே.