இணையாக்கூட்டணி ஆனது இந்தியா கூட்டணி !
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.கக்கு எதிராக, 28 கட்சிகள் அடங்கிய, இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், தி.மு.க. சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டணியில் ஒரு விசித்திரமான சூழ்நிலை மேற்கு வங்கத்தில் உள்ளது. இங்கே கம்யூனிடுக்கள், காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை இணைவது என்பது குதிரைக்கொம்பு என அரசியல் வல்லுநர்கள் கருத்துக்களை தொடர்ந்து கூறிவந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானஜி இன்று, அதிரடியாக நான் இண்டியா கூட்டணியில் ஒரு அங்கம். ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது. ஆனால் அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. காங்கிரசுடன் எந்த உறவும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் தனித்தே போட்டியிடுவேன் என கூறியுள்ளார்
தனித்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பா.ஜ.கவை தோற்கடிப்போம்.என்றிருக்கிறார்.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவான்சிங் பஞ்சாப்பில் உள்ள 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் எனத்தெரித்திருக்கிறார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியிருப்பதாவது… கூட்டணியில் கருத்து வேறுபாடு வருவது சகஜம் தான். பேசி தீர்த்துக் கொள்வோம். மம்தா பானர்ஜியுடன் சமூகமான தொடர்பில் இருந்து வருகிறோம். மம்தா ஒரு பொழுதும் பா.ஜ.கவை ஆதரிக்க மாட்டார். அதில் அவர் உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.