இலவசம் வேண்டாம்… முள்படுக்கையில் படுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் !
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழக அரசு ஒரு கிலோ நெல்லுக்கு 11 ரூபாய் வழங்க வலியுறுத்தி முள் படுக்கையில் படுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், குறிப்பாக மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோ நெல் 22 ரூபாய் 40 காசுகள் வழங்குகின்றது, ஆனால் தமிழக அரசு ஒரு கிலோ நெல்லுக்கு வெறும் 70 பைசா வழங்குவதை மாற்றி ஒரு கிலோ நெல்லுக்கு 11 ரூபாய் வழங்க வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அத்தியாவசிய விலைப்பட்டிலிருந்து நெல், பால் மற்றும் சர்க்கரை ஆகிய மூன்றையும் விளக்களிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு உரத்திற்கு மானியம் வழங்குவது போல் மாநில அரசும் உரத்திற்கு மானியம் வழங்க வேண்டும் எனவும், ஒரு டன் கரும்பிற்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி மாடு மற்றும் மண் பராமரிக்க அவரவர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும், குறிப்பாக பொதுமக்களுக்கு எவ்வித இலவசங்களும் வழங்காமல் மாதா மாதம் குடும்ப அட்டைக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.