உரித்தால் மட்டுமல்ல விதைத்தாலும் வரும் கண்ணீர் !
திருச்சி புதுக்கோட்டை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயம் மற்றும் பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இங்கு கொண்டுவரப்படும் வெங்காயம் தரம் பிரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உட்பட பிற மாநிலங்களுக்கும். இலங்கை, மலேசியா, இந்தோனேசியா உடபட வெளி நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விளைச்சல் இந்தமாதம் அதிகரித்துள்ளதால், விலை சரிந்துள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளதால், விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. சராசரியாக வாரம் நாட்கள் நடைபெறும் சந்தைக்கு 130 டன் சின்ன வெங்காயம்வரத்து இருந்து வந்த நிலையில், இப்போது தினமும் 450 டன் சின்ன வெங்காயம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
அதேபோல் பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தின் வரத்தும் 2 மடங்காக உயர்ந்துள்ளதால் விலை சரிந்துள்ளது. இதனால், கடந்த மாதம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம், இப்போது கிலோ 20ரூபாயாக விலை வீழ்ந்துள்ளது பெரிய வெங்காயம் விலை கிலோ 30 ரூபாயாக இருந்தது. தற்பொழுது 15 ஆக இருக்கிறது.
இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, ‘சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் மீதான விலை உயர்வை எதிர்பார்த்து, ஆயிரககணக்கான விவசாயிகள் அதிக வெங்காயத்தை இருப்பு வைத்தனர். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் வெங்காயத்தை பாதுகாக்க முடியாது என்பதால், சந்தைக்கு அனுப்பினர். இதே காலகட்டத்தில் புதிதாக அறு வடை செய்யப்பட்ட வெங்காயமும் சந்தைக்கு வரத் தொடங்கியது. ஒரே நேரத்தில் வரத்து அதிகமாக இருந்ததால் வெங்காயம் விலை சரிந்துள்ளது’. வரும் மாதங்களில் விலை உயர்த்தால், விவசாயிகள் தப்பிப்பார்கள் இல்லா விட்டால், ஆயிரக் கணக்கான விவசாயிகள் வெங்காய சாகும்டியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றனர். உரித்தால் மட்டுமல்ல வெங்காயத்தை விதைத்தாலும் விவசாயி கண்ணீர் விடவேண்டியதுதான் போல….