கேட்பது குல்பி ஐஸ் ! கொடுப்பதோ குச்சி மிட்டாய் !!

0

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் இரண்டாவது வாரம் நடைபெறலாம் என நம்பப்படுகிறது அதனால் பிப்ரவரி 2வது வாரத்துக்குள் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை முடித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள் ளன, முதல் கட்டமாக திமுக, காங்கிரஸ், இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகின்றன.திமுக தலைமை அலுவலக மான அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் ஆகிய மூவரும் டில்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார்கள்.

logo right

சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக சட்டசபை குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோருடன், எத்தனை தொகுதியை கேட்டுப் பெறுவது என்பது தொடர்பாகவும், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் ஆலோசனை செய்தார்கள்.இதற்காக கே.எஸ்.அழகிரி ஏற்கனவே ஒரு பட்டியலை தயார் செய்து வைத்துள்ளார். இன்று மாலை 3 மணிக்குதாகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அண்ணா அறிவாலயம் செல்லும் காங்கிரஸ் குழு, அங்கு டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழு வுடன் பேச்சுவார்த்தை நடத்துவர்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த முறை இண்டியா கூட்டணி நிச்ச யமான வெற்றியை நோக்கி பயணம் செய்வதால் 12 தொகுதியைப்பெற காய் நகர்த்தி வருகிறது.

ஆனால் திமுக வட்டாரங்களில் இது குறித்து பேசியவர்கள், காங்கிரஸ் 10 தொகுதியில் போட்டியிட்டு 9ல் வென்றதற்கு திமுக முக்கிய காரணம். மேலும் அன்றைய அரசியல் சூழல் வேறு. இப்போது பாஜக மாநில தலைவர் அண்ணைமலை அதிரடி பேச்சு, அயோத்தி ராமர் கோயில் திறப்பு என ஏகப்பட்ட விவகாரங்கள் இருக்கிறது. ஆகையால், அதிகபட்சம் 6க்கு மேல் தர வாய்ப்பில்லை என்கிறார்கள் கத்திரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்துதானே ஆக வேண்டும் குல்பி ஐஸ்ஸா குச்சி மிட்டாயா என்பது முதல்வர் வந்தபின்னர்தான் தெரியும்.

Leave A Reply

Your email address will not be published.