சங்கியா சந்தானம் !!
சந்தானம் பேசுகையில் ஆத்திகராக பார்த்தால் இது சாமி படம், நாத்திகராக பார்த்தால் பகுத்தறிவு பேசும் கதை. கடவுள் பெயரை சொல்லி காசு பார்க்க கூடாது. கடவுள் நம்பிக்கையை கிண் டல், அரசியல் பண்ணக்கூடாது என்பதை விவரிக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நான் ஆன்மிகவா திதான். சிலர் நீங்க சங்கியா என்று கேட்கிறார்கள்.
நான் ஸ்கூல் படிக்கும்போது சங்கீதா என்ற பெண்ணை லவ் பண்ணினேன். அவரை சங்கி…சங்கினு கூப்பிடுவேன். அதற்காக நான் சங்கியா..? என்று கிண்டலடித்தார்.
இந்த படத்தை முதலில் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் ரிலீஸ் பண்ணுவதாக இருந்தது. அரசியல் சார்ந்த சில பிரச்னைகள் எழுந்ததால் அவர் ரிலீஸ் பண்ணவில்லை. அவர் நட்பு தொடர்கிறது. இந்த படத்துக்காக எழுந்த சர்ச்சை ‘கிளியர்’ ஆகிவிட்டது. எங்கள் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதால் படம் வெற்றி பெற்றது. இப்போது மக்களிடம் இறுக்கம், சோகம் அதிகமாக இருக்கிறது. காமெடி, சிரிப்பு தேவைப்படுகிறது.
அடுத்து இதே இயக்குனர் படத்தில் நடிக்கப் போகிறேன். அந்தப் படத்துக்கு கவுண்டமணி டயலாக்தான் தலைப்பு என சஸ்பென்ஸ் வைத்தவர் கடைசிவரை பெயரை மட்டும் சொல்லவே இல்லை.