சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை…

0

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனாக அலகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் கோவில் உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள். கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டில்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் தன்னாலர்கள், வங்கி ஊழியர்களால் நேற்று கோவில் மண்டபத்தில் எண்ணினர்.

logo right

இதில் ரூபாய் ஒரு கோடியே 5லட்சத்து, 84ஆயிரத்து 57 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 244 கிராம் தங்கம், 2 கிலோ 809 கிராம் வெள்ளி, 209 அயல்நாட்டு நோட்டுகள், 320 அயல் நாட்டு நாணயங்களும் காணிக்கையாக பெறப்பட்டன என கோயில் இணை ஆணையர் கல்யாணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.