சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் !
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். அவருக்கு நீலாங்கரை, கேளம்பாக்கம், படப்பை ஆகிய இடங்களில் பண்ணை வீடுகள் உள்ளன. இந்நிலையில் அவர் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள நாவலூரில் இருந்து தாழம்பூர் செல்லும் சாலையில், 12 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.
இந்த இடத்தைப் பதிவு செய்வதற்காக நேற்று முன்தினம் காலை 9.45 மணிக்கு, திருப்போரூர் சார்பதிவாளர் அலுவ லகத்துக்கு அவர் வந்தார், அவரை பதிவுத்துறை செங்கல்பட்டு மண்டல டிஐஜி ராஜ்குமார், மாவட்ட பதிவாளர் அறிவழகன், திருப்போரூர் சார்பதிவா ளர் சக்திபிரகாஷ் வரவேற்றனர்.
நிலம் வாங்க மொத்தம் 6 ஆவணங்கள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கிறார்கள் பத்திரப் பதிவு முடிந்து 10.30 மணிக்கு வெளியே வந்த ரஜினியை, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களைப் பார்த்து அவர் உற்சாகமாக கைய சைத்தபடி காரில் ஏறி புறப்பட்டார்.
இந்த 12 ஏக்கர் நிலத்தில் ரஜினிகாந்த் தனது தாயார் பெயரில் புதிதாக மருத்துவமனை கட்ட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.