ஜவ்வாது மலையை மலைக்க வைத்த ஸ்ரீபதி !!
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி, படித்துக்கொண்டிருக்கும் போது இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதி பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் தேர்வுக்கு முந்தையநாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது.குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி தனது கணவர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதன்மூலம் ஜவ்வாது மலையில் 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஊர் மக்கள் மட்டுமல்லாமலம் தமிழக முதல்வர் கல்வியாளர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் ஸ்ரீபதி பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.