ஜோதிடம் யாருக்கு பலிக்கிறது… மகிழ்ச்சி தருகிறது !!

0

ஜோதிடத்தை முழுமையாக நம்பும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஜோதிடம் அப்படியே நடக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஜோதிடர் கூறியது நடக்கவில்லை என்றாலும் அவர்கள் ஜோதிடத்தை பலிப்பதில்லை. தனக்கு இள்ளமும் அதிர்ஷ்டம் கிடைக்கும் நேரம் கூடிவரவில்லை என்று தங்கள் விதியின் மீதே பழியை போட்டுக்கொள்கிறார்கள்.

ஜோதிடர் கணிப்பு காரணமாக எத்தனையோ திருமணங்கள் நடக்காமல் நின்று போயுள்ளன. நிறைய மாணவர்கள் மேற்படிப்பு படிக்காமல் போயிருக்கிறார்கள். தொழில் தொடங்க ஆசைப்பட்ட பலர் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு முதலீடு செய்யாமல் போயிருக்கிறார்கள்.

ஜோதிடத்தைத் தாண்டி தங்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களே பெரும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இந்தியாவின் ‘மூன்’ மேன் என்று அழைக்கப்படும் அறிவியலாளரும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவருமான மயில்சாமி அண்ணாதுரை ஜோதிடம் குறித்து என்ன கூறியிருக்கிறார் தெரியுமா ?

மயில்சாமி அண்ணாதுரை வானியல் பற்றியும் ஜோதிடம் குறித்தும் என்னிடம் பலரும் கேள்வி கேட்கிறார்கள். ஜோதிடம் குறித்த கேள்விக்கு என்னுடைய சொந்தக் கருத்தைச்சொல்கிறேன். நான் என்னுடைய பதினொன்றாவது வகுப்புத் தேர்வு முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.அப்போது ஒரு ஜோதிடர் என்னுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, ‘உன் அப்பாவிற்கு மேலே உனக்குப் படிப்பு இல்லை’ என்று வாக்கு சொன்னார். அதாவது, என்னுடைய அப்பா பத்தாவது வரை படித்தவர். எனவே என்னால் எஸ்.எஸ்.எல்.சி.க்கு மேல் படித்து தேர்ச்சி அடைய முடியாது என்று சொன்னார்.

logo right

அந்த ஜோதிடர் சொன்னது, எந்த அளவிற்கு பலித்தது என்பது இப்போது இந்த உலகத்திற்கே நன்றாகத் தெரியும். என்னுடைய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எங்கள் கல்வி மாவட்டத்திலேயே நான் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்.

ஆக, என்னுடைய அனுபவத்தில் ஜோதிடம் என்பது ஒன்றுமேயில்லை. அறிவிய ல் பூர்வமாகப் பார்த்தால் ஜோதிடமும், வானியலும் ஒன்று இல்லை என்பது என்னுடைய கருத்து.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் அருகில் பறக்கும்போது செயற்கைக் கோளில் கோளாறு, தடுமாற்றம் ஏற்படுவதாக சொல்கிறார்களே அது உண்மையா..? என்றதற்கு, இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 50க்கும் மேற்பட்ட இந்திய செயற்கை கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன. அதில் ஏதேனும் ஒரு செயற்கைக்கோள் எப்போதாவது திருநள்ளா றுக்கு மேலே வந்து போகவே செய்கிறது. அப்போது பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவலும் இல்லை. இதுவே அறிவியல் பூர்வமான உண்மை. அவ்வளவுதாங்க ஜோதிடம்.

நாளை நாளை என எண்ணாமல் இந்நாள் நன்நாள் என நினைப்பவர்களுக்கு எந்நாளும் பொன்னாளே !

Leave A Reply

Your email address will not be published.