தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ரெயில் பட்ஜெட்டில் ஒதுக்கீடுகளில் சாதனை !!
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பிப்ரவரி 1 அன்று தெற்கு ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் ஒதுக்கீட்டை அறிவித்தார். 2024-25 நிதியாண்டில் ரூபாய் .12,173 கோடி ஒதுக்கீடு செய்தார். குறிப்பிடத்தக்க வகையில், தமிழ்நாடு மற்றும் கேரளா முறையே ரூபாய் 6,331 கோடி மற்றும் ரூபாய் 2,744 கோடி ஒதுக்கீடுகளுடன் தனித்து நிற்கின்றன.
2009 முதல் 2014 வரையிலான UPA ஆட்சியின் போது ஒதுக்கப்பட்ட சராசரியை விட தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கான பட்ஜெட் செலவினம் ஏழு மடங்கு அதிகம் என்று அஷ்வினி வைஷ்ணவ் அதிரவைத்துள்ளார். இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ரயில் உள்கட்டமைப்பை மாற்றுவதற்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது.
செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் வைஷ்ணவ், UPA சராசரியான 879 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் , தமிழ்நாட்டிற்கு 6,331 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஏழு மடங்கு அதிகமாகும் என்று எடுத்துரைத்தார்.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் மற்றும் 98 சதவிகித ரெயில் வலையமைப்பின் மின்மயமாக்கல் உள்ளிட்ட விரிவான ரயில் மறுமேம்பாட்டு முயற்சிகளை இம்மாநிலம் காண்கிறது. இதேபோல், கேரளாவின் ரூபாய் 2,744 கோடி, UPA சராசரியான ரூபாய் 372 கோடியை விட ஏழு மடங்கு அதிகமாக, மாற்றத்தக்க ரயில் திட்டங்களுக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. அமைச்சர் வைஷ்ணவ் கேரளாவில் மேம்பாலங்கள், நடை மேம்பாலங்கள் மற்றும் ஒரு நிலையம் ஒரு தயாரிப்புக் கடைகள் உள்ளிட்ட சாதனைகளையும் கோடிட்டுக்காட்டினார். இனி தெற்கு தேய்கிறது , வடக்கு வளர்கிறது என்ற பல்லவியை பாட முடியாது.