திண்டுக்கல் பூரிக்க வைத்த பூக்குழி திருவிழா பக்தர்கள் பரவசம் !!
உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 13ம் தேதியன்று துவங்கியது.இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், கையில் குழந்தைகளோடும், வாயில் அழகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில் பூக்குழி இறங்கி கோட்டை மாரியம்மன் தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்விற்கு கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் விழாவின் காரணமாக சில இடங்களில் போக்குவரத்திற்கு மாற்றுவழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.