திருச்சி : தாக்கலானது மாநகராட்சி நிதிநிலை அறிக்கை உரை !

0

ஒவ்வொரு வார்டிற்கும் சுமார் ரூபாய் 40.00 இலட்சம் சாலைப்பணிகளுக்கெனவும் மற்றும் ரூபாய் 50.00 இலட்சம் மழைநீர் வடிகால் அமைப்பதற்கெனவும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தெருவோர வியாபாரிகளுக்கான ஆய்வு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் கமிட்டி அமைப்பதற்கும், தேர்தல் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டி மூலம் தெருவோர வியாபாரிகள், வியாபாரம் நடத்துவதற்கு உரிய பகுதிகளை கண்டறிவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முதற்கட்டமாக யானைக்குளம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், அப்பகுதியில் செயல்படும் பர்மா பஜார் வியாபாரிகளுக்கென Street Vending Zone அமைத்து, வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், வழிவகை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

logo right

மேலரண் சாலையில் பன்னடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, மேலரண்சாலை ‘வாகனங்கள் நிறுத்தக் கூடாத மண்டலம்’ (No parking zone) என அறிவிக்கப்படும். தெப்பகுளம் முதல் இப்ராஹிம் பூங்கா வரை மேற்கொள்ளப்படும்

ஐந்து மண்டல அலுவலகங்களிலும் இடவசதிக்கேற்ப Food Street அமைப்புகள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் இட வசதிக்கேற்ப எல்கேஜி, யுகேஜி வகுப்பிற்கென தனி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதிக்கும் அறையில், விடுபட்ட மருத்துவமனைகளில் குளிர்சாதன வசதிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பல்வேறு திட்டங்களின் கீழ் ரூபாய் 140.00 கோடி மதிப்பீட்டில், சுமார் 250 கி.மீ நீளத்திற்கு paver block சாலைகள் (End to End roads) அமைக்கப்படும் புதுப்பிக்கப்படும் சீரமைக்கப்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.