தெரிஞ்ச தொழிலை விட்டவணும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் !!
விஜயின் அதிரடி அரசியல் பிரவேசம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருப்பது தமிழகத்தில் மட்டுமே என்று நினைக்க வேண்டாம்…விஜயின் அரசியல் கட்சி மேட்டர் வெளியிட்ட கேரள மனோரமா செய்திக்கு கீழே வந்த ஒரு சில கமென்டுகள்… கேரளவாசிகளின் அரசியல் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அவர்களின் மனநிலையையும் இதன் மூலம் எளிதாக புரிந்துகொள்ளலாம்..
’விஜயன் என்கிற பெயரில் தோன்றியிருக்கும் அடுத்த மெகா தோல்வி..!’
’வரலாற்று ரீதியிலான முட்டாள்த்தனம்…!’
’நடிப்புக்கு குட்பை சொல்வதே மிகப்பெரிய சமூகசேவை தான்…நன்றி…வாழ்த்துகள்.’
’விட்டத்தில் இருப்பதை எடுக்க கிச்சத்தில் வைத்ததை இழக்கணுமா தம்பி …?
’Distroying himself. Anyway, Good luck..
’சினிமாவை விட்டு அரசியலுக்கு தாவும் முன் மெகா ஸ்டார் சிரஞ்ஜீவியிடம் ஒரு யோசனை கேட்டிருக்கலாம். சினிமாவில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் அதில் சம்பாதித்ததை வைத்து கட்சி துவங்கி, அதில் எல்லாம் இழந்து மீண்டும் சினிமாவுக்குள் நுழைய வேண்டிய கட்டாயத்தின் கதை மறந்திருக்க மாட்டார்…
உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கும் போது இங்கே உங்களது பருப்பு வேகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் …’
’கடைசியா அவனும் ஒழிஞ்சான்…
’கமல், சிரஞ்சீவி, அமிதாப் இவர்கள் எல்லாம் இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள்…’
தமிழகத்தில் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு இங்கே வரிந்து கட்டி சண்டை போடாதே..
இங்கு நிம்மதியாக வாழ முடியாமல் செய்யும் சில அரசியல் பிச்சைக்காரர்களிடமிருந்து தப்பிக்க வழி இருந்தா சொல்லுங்க…
’நடிப்பை விட்டுட்டேன்னு சொன்னதால அரசியல்ல வெற்றி பெற வாய்ப்பிருக்கு…
அரசியல் என்னன்னு தைரியமா அதுல குதிச்சா கமலோட கட்சி மாதிரி ‘மையத்து’ல தான் முடியும்.
‘விட்டுட்டேன்’ னு பெரிய வாயில சொல்ல வேண்டாம். திரும்பி அங்கே தான் வந்தாகணும்.
உன்னை விட அனுபவமும் வயதும் உள்ள ரஜினியே அந்த முயற்சியை கைவிட்டுட்டாரு. கமல் திணறிக்கிட்டிருக்காரு. நீ எல்லாம் எம்மாத்திரம் ..?
இதுக்கு முன்னால எந்தப் படத்துல ‘நடிச்சிருக்கீங்க மிஸ்டர் ?
விநாசகாலே விபரீத புத்தி..!
இப்படி பல்வேறு விமர்சனங்கள் புத்தி சொல்வது போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது.