நச்சுனு பிரச்சாரத்தை துவக்கிய நயினார் நாகேந்திரன் !

0

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பிஜேபி சார்பில் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்தன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று (மார்ச் 14) பிஜேபி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டவுன் பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு தனக்கு வாக்களிக்கும் படி மக்களிடம் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

logo right

இந்நிலையில் தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத்குமார் போட்டியிடவில்லை என்பது உறுதியாகி விட்டது. நெல்லை யாருக்கு தொல்லை இல்லை அல்வா என்பதைக்காண தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும்

இதனிடையே தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை கூட்டணி குழப்பம் தீரவில்லை அதற்குள் எப்படி இவர் தானே வேட்பாளர் என களத்தில் இறங்கிவிட்டார் என்கிறார்கள் பாஜகவினரில் சிலரே.

Leave A Reply

Your email address will not be published.