நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் மார்ச் 9ம் தேதி அறிவிக்க வாய்ப்பு ?
தேர்தல் ஆணையம் இறுதிச் சரிபார்ப்புக்காக மாநிலத்தின் பல பகுதிகளுகுச் செல்கிறது என்றும் 2024 தேர்தல் நாட்காட்டி 2019ம் ஆண்டைப் போலவே இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். முந்தைய பொதுத் தேர்தல்களில், மார்ச் 10, 2019 அன்று தேதிகள் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 11ம் தேதிக்குள் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றும் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு இந்த நாட்களில் மாநிலங்களுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
பிரதிநிதிகள் மார்ச் 8-9 தேதிகளில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை மற்றும் படைகளின் இருப்பு குறித்து சரிபார்க்க அரசாங்க அதிகாரிகளை சந்திப்பார்கள் என்று தெரிகிறது.
மார்ச் 12-13 தேதிகளில், அவர்கள் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் சென்று ஆய்வு செய்ய உள்ளனர், மக்களவைத் தேர்தலுடன் யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலையும் நடத்த முடியுமா என்பதையும் ஆராய்வதாக சொல்லப்படுகிறது.