நாட்டுத் துப்பாக்கி வெடித்து படுகாயம் அடைந்த இளைஞர் !!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோம்பை ஊராட்சிக்குட்பட்ட மணலோடை கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் கார்த்தி நேற்று இரவு தனது வீட்டிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பெரிய பழமலை ,பழமலையான் கோவில் அருகில் வேட்டைக்குச் சென்று நாட்டுத்துப்பாக்கியில் வெடி மருந்தை நிரப்பும்போது எதிர்பாராவிதமாக துப்பாக்கி வெடித்ததில் கார்த்தியின் வலது கையில் படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக முதலுதவி செய்த நிலையில் இன்று காலை தொடர்ந்து வலி அதிகமாகவே துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த கோம்பை கிராம நிர்வாக அலுவலர் ராஜா இது பற்றி துறையூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் கார்த்தியிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி அரசு உரிமம் இல்லாமல் பயன்படுத்தியது தெரியவந்தது .மேலும் இதுகுறித்து துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.