பட்டாம்பூச்சி நாளில் பட்டையை கிளப்பிய மதன் கார்கி !
பட்டாம்பூச்சிகள் பற்றி தேசிய நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது பட்டாம்பூச்சிகள் இடம்பெயரத் தொடங்கும் போது வண்ணத்தின் மயக்கத்தினை நாம் பார்க்க நம்மை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டமானது வண்ணத்துப்பூச்சிகளின் வகைகள் மற்றும் நமது உயிர்வாழ்விற்கான அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருகிறது. தமிழக்த்தில் ஸ்ரீரங்கத்தில் பட்டாம்பூச்சி பூங்கா அமைந்துள்ளது.
பட்டாம்பூச்சி நாளில் குழந்தைகளுக்கான பட்டாம்பூச்சி பாடல் வண்ணமயமான குழந்தைகளின் உலகில் பட்டாம்பூச்சியின் வருகை எத்தனை அழகைக் கூட்டும் என்பதைப் பட்டாம்பூச்சி பாடல் உணர்த்துகிறது.
குதூகலம் மிக்க குழந்தைப் பருவத்தில் ஒரு சிறுமி தன்னையே சோலையாக்கி ஒரு பட்டாம்பூச்சியை விளையாட வரும்படி அழைக்கிறாள். பாப் ஃபூகன் இசையில், ஜானின் ஸ்டெஃபானியின் குரலில், மதன் கார்க்கியின் வரிகளிலமைந்த இப்பாடல் பா மியூசிக் தளத்தில் பட்டாம்பூச்சி நாளான மார்ச் 14ல் வெளியாகியுள்ளது.