பதவி வெறி கொண்ட பாசமலர்கள் !
ஒருங்கிணைந்த ஆந்திராவின் மறைந்த முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்எஸ் ஷர்மிளா கடந்த 4ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருடைய தலைமையில் செயல்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியையும் காங்கிரசுடன் இணைத்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடந்தது, அப்போது ஷர்மிளா கூறுகையில், காங்கிரசில் என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதை ஏற்று செயல்படுவேன் என்றார். அவருக்கு ஆந்திரா காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும் என்று அப்போதே கூறப்பட்டு வந்தது. ஆந்திரா காங்கிரஸ் தலைவர் பதவியை ருத்ராராஜூ நேற்று முன்தினம் ராஜினாமா செய்த்தை அடுத்து இது உறுதியானது. இதைத்தொடர்ந்து, ஆந்திரா காங்கிரஸ் தலைவராக ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நியமனம் பற்றிய அறிவிப்பும், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளராக ருத்ராராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பும் வெளியாகி இருக்அரசியல் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலும் நடக்க உள்ள நிலை யில், இந்த நியமனம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த இணைப்பு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு பெரும் சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசில் இணையும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஷர்மிளா எடுத்து விட்டார். இதன் வெளிப்பாடாகத்தான் ஷர்மிளா தன்னுடைய ஓய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, காங்கிரசுடன் தன் கட்சியை இணைக்கும் முடிவில் உறுதி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசியல் நோக்கர் கணக்கு வேறாக இருக்கிறது ஜெகன் மோகன் ரெட்டி பாஜக கூட்டணிக்கு இது வழி அமைத்துதரும் என்கிறார்கள், ஆனால் ஆந்திர மக்களோ பதவிக்காக அடித்துக்கொள்ளும் பாசமலர்கள் என சிரிக்கத்தொடங்கிவிட்டார்கள்.