பறவைகள் பலவிதம் : கணக்கெடுக்கும் பணி தீவிரம் !
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வனப்பகுதியில் திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.தமிழகம் முழுவதும் பறவைகளை இன்று ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது.
பறவைகளின் இருப்பிடங்கள், அதன் எண்ணிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் பெல் வனப்பகுதி, துறையூர், மணப்பாறை உள்ளிட்ட 5 இடங்களில் காலை , மாலை இரு வேளைகளிலும் நடைபெற்றது இதில் திருச்சி திருவெறும்பூர் பெல் வனப்பகுதியில் உதவி வன பாதுகாப்பு அலுவலர் சம்பத்குமார், உதவி வனச்சரக அலுவலர் கோபிநாத் ஆகியோரது தலைமையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
கணக்கெடுப்பின்போது செண்பகம், மைனா, மரங்கொத்தி, , பனங்காடை, மயில் தேன்சிட்டு, ஊர்குருவி, ரெட்டைவால் குருவி, கிளி, செங்குத்துக் கொண்டை குருவி, நீல வாள் பஞ்சுருட்டான், குருவி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.
இதில் பறவை ஆர்வலர்கள் மகேஷ் அப்துல் ராஜ் கணேஷ்குமார், வன பாதுகாவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.