பல்ஸ் பார்க்கவா பாதை மாறவா ?
அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்த தமாகா தலைவர் வாசன், சமீப நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து பேசியது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் போனில் பேசியது ஆகியவற்றால், கூட் டணியை மீண்டும் உருவாக்க பாஜக துாதுவராக வாசன் புறப் பட்டு விட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், கோவையில் தமாகா தலைவர் வாசன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது
தேசிய கட்சியான பாஜகவில் தேர் தல், கூட்டணி குறித்து பேசுவதற்கு இந்தியா முழுவதும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் இருக்கின்றனர். எனவே பாஜகவுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, எந்த மாநிலத்திலும் கூட்ட ணிக்காக பேசுவதற்கு மற்றவர்களின் தயவு தேவை இல்லை, அவசியமும் இல்லை. பாஜக கூட்டணியில் தமாகா, பன்னீர்செல்வம், தினகரன் உட்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக கூறப்படுவதும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத தவறான தகவல்.தமாகா தலைவர் என்ற முறையில், கூட்டணி தலைவர்களின் ஒருமித்த கருத்தோடு தேர்தலில் நின்று, அதனடிப்படையில் கட்சிகளோடு நட்பாக இருக்கும் காரணத்தால், தலைவர்களை சந்தித்து நாட்டு நலன், மக்கள் நலன், மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன், இப்போதும் தொடர்கிறது.
தமாகா செயற்குழு கூட்டம் வரும் 12ம் தேதி சென்னையில் நடக்கிறது. அதில், மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு, அதில் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும். செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.