பொட்டி வந்தாச்சு ! பொட்டி வந்தாச்சு !!
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ’வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தவாதம்’ என்கிற தலைப்பில் பொது மக்களிடமிருந்து பிரதமர் மோடிக்கு நேரடியாக ஆலோசனை அனுப்புவதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் மனுக்களை சேகரிப்பதற்காக சேகரிப்பு பெட்டி அமைத்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மடத்து தெரு பகுதியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை சேகரிப்பு பெட்டி அமைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் சோழராஜன், மாவட்ட செயலாளர் பரமகுரு, மாவட்ட துணைத் தலைவர் வேதா செல்வம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பார்வையாளர் சுரேஷ், மாநகர தலைவர் வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காமாட்சி ஜோசியர் தெரு, பாலக்கரை ஆகிய பகுதிகளில் இருந்த சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை துண்டு பிரசுரமாக எழுதி பெட்டியில் செலுத்தினர். தொடர்ந்து பொது மக்களிடம் ஆலோசனை விண்ணப்பங்களை வழங்கி கருத்துக்களை சேகரித்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்ப்பில் இப்படி மனு பெட்டி வைத்து வாங்கியதை நம்மால் மறக்க முடியவில்லை என்னமோ போங்கப்பா.