போதையால் பாதை மாறும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் !
தமிழகத்தில் பெருகி வரும் போதை பொருள் கலாச்சாரத்தை கண்டித்தும் அதை தடுக்க வலியுறுத்தியும் இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் தலைமையில், திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி கோட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அப்போது, தமிழகத்தில் இளைஞர்கள் மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிகமாகி எதிர்கால சமுதாயத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது இதற்கு அரசு துணை போகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. போதை பொருள் விவகாரத்தில் திமுக பிரமுகர்கள் சிக்கி உள்ளன ர். எனவே என்.ஐ. ஏ., விசாரணை நடத்த வேண்டும்.போதை பொருள் புழக்கத்தை தடுக்க,கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முழுவதும் இந்த இளைஞர் முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
நேற்று கோட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில், போதை பழக்கங்களால் இளைஞர்கள் வாழ்கை சீரழிவதை தடுக்க தமிழக அரசு போதை பொருட்களை தடை செய்ய வேண்டும். மதுக்கடைகளை உடனே மூட வேண்டும். காவல் துறை மூலம் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். என்றும் கோஷமிட்டனர்.