மீண்டு(ம்) வந்தது அக்னி கலசம் ! பாமகவினர் உற்சாகம் !!

0

திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் கடந்த 1989ம் ஆண்டு பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் நிறுவப்பட்டது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாயுடுமங்கலம் கூட்டு சாலை சந்திப்பில் பேருந்து நிறுத்தம் கட்ட வேண்டும் என வன்னியர் சங்கத்தின் கலசம் அகற்றப்பட்டு மீண்டும் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்படும் என வருவாய் துறையினர் உறுதி அளித்ததின் பேரில் அக்னி கலசம் அகற்றப்பட்டது.

அதன்பின் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்ட பின்னரும் அக்னி கலசம் வைக்க வருவாய் துறையும் காவல்துறையும் அனுமதி அளிக்காததால் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அதிகாலை வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அனுமதியின்றி நாயுடுமங்களம் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டது.

logo right

அனுமதியின்றி வைக்கப்பட்ட அக்னி கலசம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 15 நபர்களை கலசபாக்கம் காவல் நிலை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து பாமக சார்பில் அக்னி கலசம் நிறுவப்படும் என்று அறிவிப்பு வெளியானது, இதனை தொடர்ந்து இன்று திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் திருவண்ணாமலையிலிருந்து இருசக்கர வாகனம், கார்கள் போன்றவற்றில் பேரணியாக வந்து நாயுடுமங்கலம் கூட்டு சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே அக்னி கலசத்தை நிறுவினர்.

ஆயிரக்கணக்கான வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திரண்டதால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், இதனால் நாயுடுமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.