ராமா ராமா … சர்ச்சை போஸ்டர் பக்தர்கள் முகம் சுழிப்பு…
அயோத்தியில் வருகின்ற 22ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் ராமரோடு நடந்து வரும் பாரத பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வருவது போன்று உள்ள படத்தில் ராமர் செருப்பு இல்லாமல் நடந்து வருகிறார் அவருடன் வரும் மோடி அண்ணாமலை செருப்புடன் நடந்து வருவது போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது இதைக்கண்ட பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ராம பக்தர்கள் உடனடியாக இந்த போஸ்டரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
அதே போல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 19ம் தேதி மாலை 6 மணி முதல் 20ம் தேதி மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருப்பது கடைகளை அடைக்கச் சொல்வது போன்ற செயல்களால் வியாபாரிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பினரோ அப்படா நல்ல சாலை கிடைச்சிருக்கு விளக்குகள் எரிய ஆரம்பித்து விட்டன, இப்படி வருடத்திற்கு ஒரு முறை பிரதமர் வந்து விட்டு சென்றால் நன்றாக இருக்கும் என்கிறார்கள்.