வரிசெலுத்தும் மக்களுக்கு… ஹாப்பியா ! ஹல்வாவா ?
ஹல்வா விழாவில், சீதாராமனுடன் நிதிச் செயலர் டி வி சோமநாதன், பொருளாதார விவகாரச் செயலர் அஜய் சேத், டிஐபிஏஎம் செயலர் துஹின் காந்தா பாண்டே, வருவாய்த் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா, சிபிடிடி தலைவர் நிதின் குப்தா, சிபிஐசி தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் உள்ளிட்டோர் நேற்று கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் பொழுது ஹல்வா தயாரித்து அதனை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது, பட்ஜெட்டின் ரகசியத்தை காக்க, நிதி அமைச்சகத்தின் தலைமையகம் ஒரு வகையான ‘ஃபோர்ட் நாக்ஸ்’ ஆக மாறுகிறது. பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தங்கள் பணியிடங்களில் லாக்-இன் செய்து, எந்த விவரமும் வெளியே கசியாமல் இருப்பதை உறுதிசெய்ய கடுமையான விதிகளுடன் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இந்த நேரத்தில், தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுகின்றன, அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
நீங்கள் ஹல்வா கிண்டுங்கள் பகிருங்கள் ஹல்வாவை நிதியமைச்சரே 10 ஆண்டுகளாக வரி செலுத்துவோர் உங்கள் அரசின் மீது நிறைய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் இந்த ஆண்டாவது கொஞ்சம் கருணை காட்டுங்கள் எங்களுக்கு ஹல்வா வேண்டாம் சிறிதாவது விலக்கு அதுதான் எங்கள் இலக்கு!.