அண்ணாமலையார் கோவிலின் பௌர்ணமி உண்டியல் வருவாய் 2 கோடியே 55 லட்சம் ரூபாய் !!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாதம் பௌர்ணமி முடிந்து நேற்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணிகள் காலை முதல் நடைபெற்று வந்தது.

அண்ணாமலையார் கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடைபெறும்.

logo right

 

பங்குனி மாதம் பௌர்ணமி கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் செலுத்த காணிக்கையாக 2, கோடியே 55, லட்சத்து 2, ஆயிரம் 820 ரூபாய் தங்கம் 265கிராம் மற்றும் வெள்ளி 2322 கிலோ கிராம் என பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.