திக்கு முக்காடியது கொடைக்கானல்.. திணறிப்போன மக்கள்…

தொடர் விடுமுறை காரணமாகவும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக நான்கு மணி நேரத்திற்கு மேலாக கொடைக்கானலில் வாகன நெரிசல், சுற்றுலா பயணிகள் அவதி.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. ஏப்ரல்,மே ஆகிய இரண்டு மாதங்களும் கோடை சீசன் காலங்கள் ஆகும். வழக்கமாக கொடை சீசன் காலங்களில் தமிழ்நாடு மட்டும் அல்ல அது வெளி மாநிலங்கள் வெளி நாடுகள் ஆகிய பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள்.

logo right

தற்போது கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் படையெடுப்பு தொடங்கி விட்டது என்று கூறலாம். இரண்டு நாட்களும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அவர்களது வாகனங்களின் வருகையும் அதிகரித்து உள்ளது. கொடைக்கானலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வாகனங்கள் வர தொடங்கியுள்ளன. இதனால் கொடைக்கானல் பெருமாள் மலை பகுதியில் இருந்தே வாகன நெரிசல் தொடங்கி உள்ளது.

 

சுற்றுலா இடங்கள் உள்ள பகுதிகளில் வாகன நெரிசல் காரணமாக சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன் காரணமாக கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கொடைக்கானலில் போதிய  வாகன நிறுத்தும் வசதிகள் இல்லாத காரணத்தினாலும், சாலைகள் குறுகிய நிலையில் உள்ளதாலும், வாகன நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதே போல கொடைக்கானல் பிரதான சாலைகளில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் தற்போது நூற்றுக்கணக்கில் முளைத்துள்ளன.

இந்த ஆக்கிரமிப்பு கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. வாகன நெரிசலை தவிர்ப்பதற்கு கூடுதல் போலீசார்  ரோந்து பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.