திருச்சி : மாநகர காவல் ஆணையர் தலைமையில் மாதாந்திர குற்றக்கலந்தாய்வு கூட்டம் !

0

நேற்று திருச்சி மாநகர ஆயுதப்படை திருமணமண்டபத்தில் பிப்ரவரி – 2024 மாதத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப.,தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் திரு.S.செல்வகுமார், (தெற்கு), திரு.V.அன்பு, (வடக்கு), காவல் கூடுதல் துணை ஆணையர்(ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் பேசுகையில்…

• பாராளுமன்ற தேர்தல்- 2024 பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், முக்கிய குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும்,

logo right

• விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்கள்.

• அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெற வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும், சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும்,

• மேலும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள திருட்டு வழக்குளை துரிதமாக புலன்விசாரணை செய்து, எதிரிகளை கைது, வழக்கு சொத்துக்களை மீட்க வேண்டும், திருச்சி மாநகரம் முழுவதும் பொருந்தப்பட்டுள்ள சுமார் CCTV கேமராக்களை முறையாக பாரமரிக்க வேண்டும் எனவும், மேலும் பழுதான CCTV கேமராக்களை பழுதுபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகார்கள், காவல்துறை இயக்குநர் அலுவலக புகார் மனுக்கள் மற்றும் காவல்நிலையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொண்டும், அவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்தும், வழக்கு பதிவு செய்ய முகாத்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும், இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனராக (வடக்கு) அன்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்ததால். இவர் சென்னையில் ரயில்வே எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய துணை போலீஸ் கமிஷனராக திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் விவேகாநந்தசுக்லா நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் நான்கு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தகவலும் வந்ததால் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.