பளப்பளப்பானது பயன்பாட்டுக்கு வந்தது பாலம் ! பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு !!
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மேம்பாலத்தில், சென்னை மார்க்கத்தில் அமைந்த வழித்தடம் கற்கள் சரிந்து பழுதடைந்தது.
அதனால் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி சென்னை மார்க்கத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. திருச்சி ஜீ கார்னர் பகுதியில் இருந்து, செந்தண்ணீர்புரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மார்க்கத்தில் ஆன வழித்தடத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பாலம் பழுது நீக்கி சீரமைக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின் இன்று சென்னை வழித்தடதில் உள்ள பாலம் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என். நேரு அன்பில் மகேஷ் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் பாலத்தை திறந்து விட்டனர்.
இத்திறப்பு விழாவின் பொழுது மாநகராட்சி மேயர் க.அன்பழகன், மாநகர காவல் துறை ஆணையர் காமினி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர், போக்குவரத்து காவலர்கள் முதன்முதலில் புடைசூழ பாலத்தில் பறந்து சென்றனர்.