தருமபுரியில் முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
தருமபுரி என்றால் என் நினைவுக்கு வருவது ஒகேனக்கல். தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியில் இங்கு நிற்கிறேன். மூன்று முத்துத்தான அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோரின் பணிகள் இதில் அடங்கி உள்ளது.
கட்சிப்பணி, ஆட்சிப்பணி ஆகிய இரண்டையும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திட்டம் பெண்களுக்கு திமுக அரசு வழங்கிய மிகப்பெரிய அதிகார கொடை.10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சுரண்டியவர்களால் திமுக போல் திட்டங்களை செயல்படுத்த முடிந்ததா.
திமுக அரசு போல மக்கள் நலத்திட்டங்களை அதிமுக-வால் பட்டியலிட முடியுமா. திமுக கொண்டு வந்த ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியது தான் அதிமுகவின் சாதனை. வாச்சாத்தி கொடுமையை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். எந்த ஆட்சியில் நடந்தது என்பதையும் மறந்து இருக்க மாட்டீர்கள்.
மத்திய பாஜக அரசு எல்லா மாநிலங்களையும் சமாமாக நினைகிறதா ? எல்லா மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் வேலையை விட்டுவிட்டு அழிக்கப் பார்கிறது மத்திய பாஜக அரசு. மாநிலத்துக்கு தேவையான நீதியை வழங்க மறுக்கிறது மத்திய பாஜக அரசு. நீதி என்பது மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் போன்றது அதை நிறுத்துகிறது பாஜக அரசு. தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்பயணத்தை வெற்றுப்பயணமாக மக்கள் பார்க்கிறார்கள் இவ்வாறு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.