சமயபுரம் பூச்சொரிதல் விழா நாளை தொடங்குகிறது !
தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டுத்தலங்களில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையான தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் மற்றும் தைப்பூசத்திருவிழா ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற தாகும்.
இந்தாண்டு பூச்சொரிதல் விழா வரும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையான 10ம்தேதி நடைபெறவுள்ளது. அன்று முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை, உலக நன்மைக்கா கவும், பக்தர்களுக்கு சகல செளபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
இந்நாட்களில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. அதற்கு பதிலாக நீர்மோர், துள்ளுமாவு, இளநீர், கரும்பு பானகம் ஆகியவை நைவேத்தியமாக வழங்கப்படும். அம்மனுக்கு படைக்கப்படும் உணவுகள் அனைத்தும் கோடைகாலங்களில் மக்களின் சூட்டை தணித்து உடல் ஆரோக்கியத்தை பேணவும் அக்காலத்திலேயே நடைமுறையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையாக நம்முன்னோர்கள் நமக்கு வழி வகுத்து கொடுத்துள்ளனர்.