இன்று மஹா சிவராத்திரி விழா மறக்காதிங்க !
இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் இன்று இரவு நடக்கவுள்ளது, இதை முன் னிட்டு இரவு 10 மணிக்கு முதல் ஜாமம் 12 மணிக்கு இரண்டாம் ஜாமம். 2 மணிக்கு மூன்றாம் கால பூஜை. ஜம்புலிங்கேஸ்வரர் மற்றும் குபேரலிங்கேஸ்வரர் ஆகியோருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள் வழிபாடுகள் நடக்கவுள்ளன.
3ம் ஜாம நிறைவில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவர்கள். நிறைவாக 4ம் ஜாம பூஜை அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் சிவரரத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் கோயில் நவராத்திரி கலைவிழா அரங்கில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் திருச்சிமற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த முன்னணி நடனப்பள்ளி மாணவ மாணவியர் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதைத்தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்துறை வல்லுனர்கள் மூலம் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள் நடக்கவுள்ளன. நாளை இரவு 8 மணி முதல் தீட்சை பெற்ற சிவனடியார்கள். கோயில் கொடிமரமண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபம். மூன்றாம் பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் ஆன்மார்ந்த சிவபூஜை மற்றும் அபிஷேகங்கள் நடத்துவர்கள் விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பிரகாஷ் ஆலோசனைப்படி, நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
மற்ற கோயில்கள் :மகாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பிற சிவஸ்தலங்களிலும் மஹா சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது அவற்றில் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் நந்திகோயில் தெரு நாதசுவாமி கோயில் இ.பி ரோடு பூலோகநாதசுவாமி கோயில் தஞ்சாவூர்ரோடு கைலாசநாதர்கோயில், உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயில் உய்யக்கொண்டான் திருமலை உஜ் ஜீவநாதசுவாமிகோயில்
இவை மட்டுமல்லாமல் உத்தமர் கோயில் பிக்ஷசாடனேஷ்வார் சஸ்வதி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மண்ணச்சநல்லூர் பூமிநாதேஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயில், திருதெ டுங்குளம் நெடுங்களநாதர்கோயில் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்கவிலும் இரவு நான்கு ஜாமங்களிலும் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.