100 நாள் வேலை வாய்ப்பு உயர்த்தியது மத்திய அரசு !

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டதுதான் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது.

இந்த திட்டத்தின் பணியாளருக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(c)ன் கீழ் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு நிர்ணயம் செய்து வருகிறது மத்திய அரசு . இந்நிலையில் 100 நாள் வேலைக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

logo right

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நாளொன்றுக்கு தற்போது இருக்கும் ரூபாய் .294 ரூபாய் 319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய ஊதிய விவரங்களின்படி அதிகபட்சமாக அரியானா, சிக்கிம் மாநிலங்களில் ரூபாய் 374 ஆக உயர்ந்துள்ளது.

 

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று மத்திய அரசு அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இப்பணிகளை செய்து வரும் பணியாளர்களிடம் அமோக ஆதரவு காணப்பட்டாலும் விவசாயம் செய்பவர்கள் மத்தியில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்த வண்ணமே உள்ளது, வயல்வெளிகளில் உழைக்க மக்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட தொகையை சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அளித்துவிட்டு ஹாயாக கையெழுத்தை போட்டுவிட்டு சம்பளத்தை வாங்கிச்செல்வர்களே அதிகம் ஆகவே வரும் காலங்களில் மத்திய அரசு நல்லதொரு முடிவினை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.