துப்பாக்கி தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு வார விழா நடந்தது…
மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை திருவெறும்பூர் அருகே உள்ளது இந்த தொழிற்சாலையில் நடந்த 53வது வார பாதுகாப்பு விழா கொடியை நிர்வாக இயக்குனர் ஷிரிஷ்குமார் ஏற்றி வைத்து பாதுகாப்பு உறுதிமொழியை சக தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்டதோடு பாதுகாப்பின் அவசியம் மற்றும் பாதுகாப்பு சாதனங்களின் அவசியம் மற்றும் பாதுகாப்பு காலனி அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறினார்.
விபத்தில்லா துப்பாக்கி தொழிற்சாலை என்ற இலக்கை அடைவது தான் நமது லட்சியம் ஆகும். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பையை தவிர்த்து அரசு அறிவுரைப்படி துணி பையை பயன்படுத்த வேண்டும் அதற்கு முன் உதாரணமாக அனைத்து தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் ஒரு மஞ்சப்பை வழங்கப்படும் என்றும் கூறினார்.