அஹா இதல்லவோ ஆரோக்கிய அரசியல்…!
அரசியல்வாதிகள் மற்ற நேரங்களில் எப்படியோ, தேர்தல் நெருங்கி விட்டால் போதும் கீரியும் பாம்புமாக மாறி சீறிக் கொண்டிருப்பார்கள். அதுவும் எதிர் எதிர் வேட்பாளர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். காது கொடுத்து கேட்கவே கூசும் வசனங்களால் வசை பாடி தத்தம் ஆதரவாளர்களை உசுப்பேற்றுவதோடு பொதுமக்களையும் இம்சைக்குள்ளாக்குவார்கள்.
ஆனால், நேற்று முன்தினம் கேரளா, தலைச்சேரியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்தவர்களையும் உறவுகளையும் அதிர வைத்தார்கள் இரண்டு நட்சத்திர வேட்பாளர்கள். வடகரா தொகுதியில் இடதுசாரி முன்னணி சார்பில் போட்டியிடும் கே.கே.ஷைலஜா மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஷாஃபி பரம்பில் ஆகியோர், டாக்டர் ஜெயகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தேவன் ராமசந்திரன் ஆகியோரது இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
மண்டபத்திற்குள் நுழைந்த இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து விட்டு கை கொடுத்து அருகருகே அமர்ந்தனர். பிறகு தொகுதி நிலவரம் குறித்தும் உடல் நலம் குறித்தும் நீண்ட நேரம் சகஜமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு வேட்பாளர்களும் கலந்து கொள்ளும் சுபநிகழ்ச்சியில் வேட்பாளர்கள் இருவரும் ஏதாவது தேவையற்ற கருத்துகள் சொல்லி விடுவார்களா? இதனால் தொண்டர்களுக்கிடையில் ஏதாவது கைகலப்பு நடந்து விடுமா..? என்றெல்லாம் அச்சத்தில் இருந்த மணமக்களையும் உறவினர்களையும் இந்த கண்கொள்ளாக் காட்சி இன்பக் கடலில் ஆழ்த்தியது என்றே சொல்ல வேண்டும்.
மேடைகளில் திட்டித் தீர்ப்பதும் கொள்ளையடிப்பதில் ஒன்று சேர்வதுமாக இருந்து ஏமாற்றாமல் நட்பாக இருந்து மக்களுக்கு நன்மை செய்வது தானே ஆரோக்கியமான இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் . வாழ்க வாழ்க வாழ்க மணமக்களும் தாங்க !
Comments are closed, but trackbacks and pingbacks are open.