திமுகவிற்கு கம்யூனிட்டை போல இது கடைசி தேர்தல்…

விளைநிலங்களில் சிப்காட் அமைப்பதை எதிர்த்து போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியை  மக்கள் கணிக்கும் தேர்தலாக நாடாளுமன்ற தேர்தல் அமையும் என்று பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும்  பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் மருத்துவர் இராமதாஸ்  களம்பூர் மற்றும் வந்தவாசி ஆகிய இடங்களில் நேற்று மாலை பரப்புரை மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர்… உலகமே உற்றுநோக்கி போற்றும் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைப்பார் என்று தெரிவித்தார்.

தாய் தந்தையருக்கு அடுத்த படியாக கடவுளாக சோறு போடும்  விவசாயிகளை தான் வணங்குவதாக பாமக தலைவர் அன்புமணி நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.ஆனால் தமிழகத்தில் விவசாய நிலங்களில் சிப்காட் அமைப்பதை எதிர்த்து போராடிய விவசாயிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர், அதை எதிர்த்து வேட்பாளர் கணேஷ்குமார் தான் போராடினார், தான் அறிக்கை விட்ட பிறகு தான் விவசாயிகள் கைது செய்ததை வாபஸ் பெற்றார்கள். சிப்காட் தொழிற்சாலை வேண்டும், வேலைவாய்ப்புகள் வேண்டும் ஆனால் விவசாயிகளின் விளை நிலங்களை பறித்து சிப்காட் அமைப்பது நல்ல அரசுக்கு அழகு இல்லை என்றார்.

 

logo right

விளைநிலங்களில் சிப்காட் அமைப்பதை எதிர்த்து போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியை  மக்கள் கணிக்கும் தேர்தலாக மக்களவை தேர்தல் அமைவும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  1000 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் போது தான் பல முறை போராடியதால் அவை கைவிடப்பட்டதாகவும், தனது வாழ்க்கை போராட்டமாவே அமைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 36 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி நந்திகிராமம் மற்றும் சிங்கூரில் நிலம் கையகப்படுத்துவதை மம்தா பனர்ஜி எதிர்த்து போராடியதால் 36 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அகற்றப்பட்டது அதேபோன்று தமிழத்தில் உள்ள திமுக ஆட்சியும் முடிவுக்கு கொண்டுவர இந்த தேர்தல். ஒரு முன்னோட்டமாக அமையும் என்றார்.

#விதுரன் செய்திகளை உடனடியாக வாட்ஸாப் மூலம் அறிய Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KLk5FJo4GW12jznRd5ndVs

Comments are closed, but trackbacks and pingbacks are open.