திகு திகு திலகபாமா… வெங்காயம் வெங்காயம்…

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும்,சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குகள் சேகரித்து வந்து கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களின் சின்னத்திற்கு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திட வேண்டும் என்பதற்காக தனக்கு என தனி பாணி அமைப்பு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

logo right

இதில் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா நேற்று முதல் கட்ட பிரச்சாரமானது துவங்கப்பட்டது . முதல் கட்டப் பிரச்சாரத்திலேயே பொதுமக்களை கவரும் விதமாக சாலை ஓர கடையில் வடை, பணியாரங்கள் சுட்டு அங்கு உள்ள வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக வாக்குகளை சேகரித்தார். இன்று இரண்டாம் கட்ட பிரச்சாரமானது துவங்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் வெங்காய சந்தையில் உள்ள தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள் ,உரிமையாளர்கள், டீக்கடை வைத்துள்ளவர்கள், பணி புரியும் சக பெண்களிடம் தீவிரவாக்குகள் சேகரிக்கும் பொழுது திடீரென்று அங்கு வெங்காயம் தரம் பிரித்துக் கொண்ட பெண்களுடன் அமர்ந்து வெங்காயத்தை தரம்புரித்தும் உடன் உள்ள தொழிலாளர்களுடன் பணிபுரிந்தும் தான் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியும் சின்னமான மாம்பழம் சின்னத்திற்கு தீவிரவாக்குகள் சேகரித்தார்.

தினமும் ஒரு உத்தியை கையாளும் திலகபாமாவை வேடிக்கை பார்த்துக்கொண்டே போகிறார்கள் அவை அனைத்தும் வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்கவேண்டும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.