காப்புக்காடுகளில் பறவைகளை காப்பாற்ற வந்தாச்சு ஆளு !!
திருவண்ணாமலை காப்பு காட்டில் வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் தொட்டிகளுக்கு நீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் தற்போது வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் அண்ணாமலை காப்புக்காடு மற்றும் உள்வட்ட கிரிவல பாதையில் உள்ள காடுகளில் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பத்து தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவின் பேரில் வனச்சரகர் ஆலோசனைப்படி வனக்காப்பாளர் ராஜேஷ் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாமலையார் காப்புக்காடு மற்றும் உள்வட்ட கிரிவல பாதையில் உள்ள காடுகளில் புள்ளிமான்கள் காட்டுப்பன்றி, மலை பாம்பு, முல்லபன்றி, காட்டு முயல், மயில் உடும்பு, பாம்பு வகைகள் உள்ளிட்ட விலங்குகள் இருப்பதால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் காப்புகாட்டில் உள்ள வனவிலங்குகளின் தாக்கம் தீர்க்கும் வகையில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நம்ம ஊரிலும் வெய்யிலின் தாக்கம் தெரியத்தொடங்கிவிட்டதால் நாமும் நமது வீட்டின் மாடி அல்லது பால்கனி போன்ற இடங்களில் சிறிய தொட்டிகளில் நீர் நிரப்பி வைத்தால் பறவைகள் தாகம் தணிக்க உதவுவதோடு நமக்கும் நன்மை தரும் ஆம் பறவைகளின் எச்சங்கள் மூலமாகத்தான் பல்வேறு மரங்களின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. நம்மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும்.