மோடி பிரதமராக 64 சதவிகிதம் பேர் ஆதரவு !!
நாட்டில் இப்பொழுதே தேர்தல் ஜுரம் பரவ தொடங் கியுள்ளது. அனைத்து கட் சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஆங்கில செய்தி சேனலான ‘டைம்ஸ்நவ் – இடிஜி, பிரதமர் பதவி தொடர்பாக, மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி, முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பிரதமராக வேண்டும் என, 17 சதவிகிதம் பேர் ஆதரவு தெரி வித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பிரதமராக 15 சதவிகிதம் பேரும், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவரு மான அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமராக 12 சதவிகிதம் பேரும், உத் தவ் பால்தாக்கரே சிவசேனா தலைவர் பிரதமராக 8 சதவிகிதம் பேரும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமராக 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்புக்கள் எப்பொழுது பொய்த்துப்போனதில்லை என்பதால் மோடி மீண்டும் பாரதப்பிரதமராவது உறுதியாகி உள்ளது.